கிறிஸ்மஸ் தாத்தா பற்றி வரலாற்று ஆவணங்களில் கூறப்பட்ட முக்கியத் தகவல்கள்

கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நியாபத்துக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தாதான். ஆனால், அவர் யார்? எங்கு பிறந்தார்? எங்கு வாழ்ந்தார் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால், அயர்லாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா(சாண்டா கிளாஸ்) குறித்து ஆச்சரியப்பட வகையில் வதந்தி ஒன்று உள்ளது.

செம்மறியாடுகளை மேய்க்கும் பச்சைப்பசேல் மலைப்பாங்கான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறைகளைக் கொண்ட இடம். மேவ் மற்றும் ஜோ ஓ’கோனெல் ஆகியோரின் குடும்ப இல்லத்தின் மீது செயின்ட் நிக்கோலஸ் தேவாலய கோபுரத்தின் இடிபாடுகள் விழுந்து கிடக்கின்றன.

இந்த கல்லறையில் அமைதியாக ஓய்வெடுப்பவர்களில் எஸ்டேட்டின் ஆரம்பகால குடியிருப்பாளர்கள், தேவாலயத்தின் திருச்சபையினர் மற்றும் உள்ளூர் புராணத்தின் படி மைராவின் செயின்ட் நிக்கோலஸும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆம், சாண்டா கிளாஸ் என்ற அறியப்படும் செயின்ட் நிக்கோலஸ் தான்.

கிறிஸ்துமஸ் தாத்தா அயர்லாந்தை சேர்ந்தவரா
கிறிஸ்துமஸ் தாத்தா அயர்லாந்தில் புதைக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி உள்ளது.

அயர்லாந்து நாட்டின் கில்கெனி நகருக்கு தெற்கே 20கிமீ தொலைவில் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 12ஆம் நூற்றாண்டின் மத்தியகால நகரமான ஜெர்பாயின்ட் பூங்காவின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு வாழும் ஒரே மனிதர்கள் என்றால் அது ஓ’கானெல்ஸ் குடும்பம் தான்.

நோர் நதி மற்றும் லிட்டில் அரிகல் நதியின் குறுக்கே அமைந்துள்ள இந்த குடியேற்றம் (முன்னர் நியூடவுன் ஜெர்பாயிண்ட் என்று அழைக்கப்பட்டது) கி.பி. 1160 – இல் அயர்லாந்திற்கு வந்த நார்மன்களால் கண்டறியப்பட்டதாக கருதப்படுகிறது.

அயர்லாந்தின் ஹெரிடேஜ் கவுன்சிலின் ஆவணங்களின்படி, இந்த நகரம் 15 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்துள்ளதை , தொல்பொருள் சான்றுகளான வீடுகள், சந்தை, கோபுரம், பாலம், தெருக்கள், ஆலை, நீர் மேலாண்மை அமைப்பு மற்றும் இன்னமும் நிலைத்து நிற்கும் ஜெர்பாயிண்ட் அபே ஆகியவை வெளிப்படுத்துகின்றன.

ஆனால் 17 ஆம் நூற்றாண்டில், இந்த நகரத்தில் வாழ்ந்தவர்கள் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் பிளேக் ஆகிய காரணங்களால் இங்கிருந்து வெளியேறி விட்டனர்.

  • கிறிஸ்துமஸ் தாத்தா அயர்லாந்தை சேர்ந்தவரா
சாண்டா கிளாஸ் என்று கருதப்படும் மைராவின் செயின்ட் நிக்கோலஸ் ஏற்கனவே மரணித்த ஒரு துறவி தான்.

வதந்தியாக இருக்கும் செயின்ட் நிக்கோலஸின் கல்லறை எப்படி ஒரு பேய் நகரமாக மாறிய தனியார் பண்ணையில் முடிந்தது என்பது மர்மமான ஒன்று. ஆனால் ஓ’கோனெல் உட்பட சிலர் இந்த விஷயத்தில் உள்ளூர் கதைகள் சிறிய வெளிச்சத்தை பாய்ச்ச முடியும் என்று நம்புகிறார்கள்.

“புராணத்தின்படி, அது எப்போதும் இங்கேயேதான் இருக்கிறது,” என்று குடும்பத்தின் நெருக்கமான சாக்லேட் லாப்ரடோர் டிம்முடன் என்னையும் அந்த இடத்தை சுற்றிப் பார்க்க அழைத்து சென்றவாறே மேவ் கூறினார். தேவாலய கல்லறையில் இருந்த ஒரு அலங்கரிக்கப்பட்ட கல் உருவ பொம்மை இருக்கும் திசையில் அவர் பார்த்தார்.

தட்டையான கல்லறையில் ஒரு மனித உருவம், கைகளை ஒன்றாக இணைத்து, உள்ளங்கைகள் வெளிப்புறமாக தெரியுமாறு, அடக்கம் செய்யப்பட்ட நபரின் தொண்டு குணத்தை குறிப்பிடும் வகையில் நின்றுகொண்டிருந்தது. அப்போது “அவர் தருகிறார்” என்று அவர் சொன்னார்.

கண்டிப்பாக சாண்டா கிளாஸ், கிரிஸ் கிரிங்கில், ஃபாதர் கிறிஸ்மஸ் மற்றும் செயின்ட் நிக் என பல பெயர்களில் கிறிஸ்துமஸுக்கு பரிசுகளைப் பெற்று வளர்ந்த எவருக்கும், இந்த குறியீடு குறித்து சிறு விளக்கம் தேவை. என்னதான் அவரை நம்புபவர்களின் மனங்களில் அவர் உயிருடனும், நலமுடனும் வாழ்ந்தாலும், சாண்டா கிளாஸ் என்று கருதப்படும் மைராவின் செயின்ட் நிக்கோலஸ் ஏற்கனவே மரணித்த ஒரு துறவி தான்.

ஒரு துறவி ஆவதற்கு முன்பு, நிக்கோலஸ் பண்டைய ரோமானிய நகரமான படாராவில் பிறந்த ஒரு ஆதரவற்ற சிறுவனாக அறியப்படுகிறார். அவர் தனது பரம்பரை சொத்துக்களை “தேவையுள்ளவர்கள், நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு” வழங்கினார் என்று வாடிகனின் செய்தி கூறுகிறது. தற்போதைய நவீன துருக்கியின் ஒரு பகுதியாக உள்ள மைராவின் பிஷப்பாக அவர் பொறுப்பேற்றிருந்தார்.

இவர் இயேசுவை கடவுளின் மகனாக அறிவித்த 325ம் ஆண்டு நைசியா கவுன்சிலில் கலந்து கொண்டார். பின்னர் 6 டிசம்பர் 343ம் ஆண்டு மைராவில் இறந்து போனார் மற்றும் அங்கேயே அடக்கமும் செய்யப்பட்டார். ஆனால் , இன்று வரையிலும் செயின்ட் நிக்கோலஸின் உடல் சரியாக எங்கிருக்கிறது என்பது அறிஞர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

  • கிறிஸ்துமஸ் தாத்தா அயர்லாந்தை சேர்ந்தவரா
இப்போது கல்லறை இருக்கும் இடமே உண்மையான இடம் இல்லை

சிலரோ துருக்கியின் அண்டலியாவில் உள்ள செயின்ட் நிக்கோலஸ் தேவாலய தரைத் தளத்திற்கு கீழே தான் அவரது கல்லறை இருப்பதாக நம்புகின்றனர். மற்றவர்களோ அவரது உடல் திருடப்பட்டு இத்தாலியில் உள்ள பாரிக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதாக கூறுகின்றனர். மேலும், பலரோ செயின்ட் நிக்கின் உடலில் உள்ள நினைவுச்சின்னங்கள் பிடுங்கப்பட்டு, பின்னர் அவை விற்கப்பட்டதாகவும் அல்லது உலகெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் தேவாலயங்களுக்கு பரிசளிக்கப்பட்ட விட்டதாகவும் கூறுகின்றனர்.

மேவ் சாய்ந்தவாறு, செயின்ட் நிக்கோலஸின் தோள்களுக்கு மேல் எட்டிப்பார்க்கும் இரண்டு ஆண் உருவங்களைச் சுட்டிக் காட்டினார். அந்த உருவங்கள் செயின்ட் நிக்கோலஸின் உடலை துருக்கியில் அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இத்தாலிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு பொறுப்பான இரண்டு சிலுவைப்போர் மாவீரர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறது, என்று அவர் கூறினார்.

அவர்களின் பணியின் போது, ​​மாவீரர்கள் செயிண்ட்டிடமிருந்து ஒரு நினைவுச்சின்னத்தை அயர்லாந்திற்கு எடுத்துச் சென்றனர், அங்கு அது நியூடவுன் ஜெர்பாயின்ட்டில் உள்ள செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் சேதமாகி பின்னர் தேவாலய கல்லறையிலேயே புதைக்கப்பட்டது என்று புராணக்கதையில் உள்ளது.

கல்லறை மைதானத்தின் வழியாக டிம் சென்றபோது, ​​16 ஆண்டுகளுக்கு முன்பு மேவும் ஜோவும் ஜெர்பாயின்ட் பூங்காவை எப்படி தங்களுக்கு சொந்தமாக்கினார்கள் என்பதை மேவ் விவரித்தார். “உண்மையில் சொல்ல வேண்டுமானால், அது ஒரு அற்புதமான நாள்,” என்று அவர் நினைவு கூர்ந்தார். “அயர்லாந்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரிட்டிஷ் தீவுகளிலும் கைவிடப்பட்ட நகரத்திற்கான ஒரு சிறந்த உதாரணத்தை நாங்கள் வாங்கியுள்ளோம்.” என்று அவர் கூறினார்.

ஜெர்பாயிண்ட் பார்க் இப்போது வேலை நடந்து கொண்டிருக்கும் பண்ணையாக உள்ளது. அதே சமயம் மேவ் “வர்ஜின் சைட் ” என்று அழைத்த இடம் , அகழ்வாராய்ச்சி நடைபெறாத இடமாக உள்ளது. ஆனால் சில அறிஞர்கள் இந்த இடத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பதிவு செய்யப்பட்டுள்ள இடையூறுகளை சுட்டிக்காட்டுகின்றனர்.

“இப்போது கல்லறை இருக்கும் இடமே உண்மையான இடம் இல்லை. இது 1839 இல் மாற்றப்பட்டது” என்று அயர்லாந்தின் குடியேற்ற அருங்காட்சியகமான EPIC இல் கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு தலைவராக இருக்கும் நாதன் மேனியன் கூறினார். “எனவே, நியூடவுன் ஜெர்பாயின்ட்டில் இப்போது நீங்கள் ஹெட்ஸ்டோனைப் பார்க்கும் இடம் அதன் உண்மையான இடம் கிடையாது.”

  • கிறிஸ்துமஸ் தாத்தா அயர்லாந்தை சேர்ந்தவரா
கல்லறையை தோண்டி எடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை

கில்கெனி கவுண்டியைச் சேர்ந்த மேனியன், ஜெர்பாயின்ட் பூங்காவில் உள்ள செயின்ட் நிக்கின் கல்லறையைப் பற்றிய வதந்திகளுடன் தான் வளர்ந்ததை நினைவு கூர்ந்தார். இது அவரது ஆர்வத்தையும் உண்மைகளை தெரிந்து கொள்வதற்கான பசியையும் தூண்டியதாக அவர் கூறினார். ” உறுதியாக நான் எப்போதும் வரலாற்றில் ஆர்வமானவனாக இருந்தேன்” என்று அவர் தெரிவித்தார், “அதுவே தற்போது நான் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றது.”

ஜெர்பாயின்ட் பார்க் கல்லறையின் கதைகளை பற்றி பேசும் மேனியன், எந்த வித உடல்சார் ஆதாரமும் இல்லாமல், “இந்தக் கதையைப் பற்றி உறுதியுடன் எதையும் கூறுவது சாத்தியமில்லை” என்று ஒப்புக்கொள்கிறார்.

புனித நிக்கோலஸின் நினைவுச்சின்னம் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாக சிலர் நம்பினாலும், மற்றவர்கள் கல்லறை தவறான இடத்தில் குறிக்கப் பட்டுள்ளதாகவும், அது உண்மையில் ஒரு உள்ளூர் பாதிரியாரின் கல்லறை என கருதுவதாகவும் அவர் கூறினார்.

“1839 இல் அது நகர்த்தப்பட்டபோது, உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பை அவர்கள் பெற்றிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்,” என்று ஆச்சரியத்துடன் அவர் கூறினார்.

அந்த கல்லறையை தோண்டி எடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்று கூறும் மேவ், அந்த கல்லறையில் செயிண்ட்டின் நினைவுச்சின்னம் புதைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார். “அங்கு ஒரு உருவ சிலை உள்ளது என்பது உண்மை – ஒரு நினைவுச்சின்னத்தை அமைப்பதில் நிறைய வேலைகள் நடந்துள்ளன, எனவே இந்த இடத்தை குறிப்பதில் மக்கள் போதுமான அளவு அக்கறை காட்டியிருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

“எதுவுமே இல்லாமல் ஒரு பெரிய செதுக்கப்பட்ட சிலையை ஒரு இடத்தில் வைக்க மாட்டீர்கள். எனவே அங்கு ஏதோ இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்”

அந்த கல்லறையைத் தோண்டி எடுக்காமல், கற்சிலைக்கு கீழே என்ன புதைந்துள்ளது என்பதை யாராலும் அறிய முடியாது என்று மேனியன் ஒப்புக்கொள்கிறார். புனித நினைவுச்சின்ன வர்த்தகம் ஒரு பிரச்னைக்குரிய சந்தையாகவே உள்ளது என்பதை அவர் குறிப்பிடுகிறார்.

புனிதர்களின் உடல் உறுப்புகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஒரே வழி மற்ற உறுதிப்படுத்தப்பட்ட நினைவுச்சின்னங்களுடன் அதன் டிஎன்ஏ மாதிரிகளை ஒப்பிட்டு பார்ப்பதுதான்.

“எனவே, என்னால் உறுதியாக அயர்லாந்தில் சாண்டா உண்மையானவரா அல்லது இல்லையா என்பதை நிரூபிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் அதை நான் விரும்பவுமில்லை,” என்று மேனியன் ஒப்புக்கொண்டார்.

  • கிறிஸ்துமஸ் தாத்தா அயர்லாந்தை சேர்ந்தவரா
நிக்கோலஸின் கல்லறைக்குதோராயமாக 10,000 சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

மேவ், கிறிஸ்மஸ் உணர்வை ஒருங்கிணைத்து புராணத்தின் கூற்றை நம்புகிறார். மேலும், ஆண்டுதோறும் ஜெர்பாயின்ட் பூங்காவில் உள்ள செயின்ட் நிக்கோலஸின் கல்லறைக்கு வரும் தோராயமாக 10,000 சுற்றுலாப் பயணிகளில் பலரும் அதையே செய்கிறார்கள்.

அப்படியிருந்தும், ஜெர்பாயிண்ட் பார்க் ஒன்றும் கிறிஸ்துமஸுக்கு செல்வதற்கான முக்கிய இடமாக இன்னும் மாறவில்லை. தொழில்நுட்ப ரீதியாக இது ஆண்டின் அந்த நேரத்தில் பொதுமக்கள் வருகைக்கு திறக்கப்படாது. ஆனால், பார்வையாளர்கள் நேரடியாக ஜெர்பாயிண்ட் பூங்காவைத் தொடர்புகொண்டு, தனிப்பட்ட சுற்றுலாவை முன்பதிவு செய்துக்கொள்ள வரவேற்கப்படுவதாக மேவ் கூறுகிறார்.

பெரும்பாலும், ஜெர்பாயின்ட் பூங்கா டிசம்பர் மாதத்தில் அமைதியாக இருக்கும். ஆனால், ஜோ மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் இணைந்து ஒரு அமைதியான குடும்ப கூடுதலாக செயின்ட் நிக்கோலஸின் பண்டிகை தினமான டிசம்பர் 6ஐ “ருசியான” செயின்ட் நிக்கோலஸ் மசாலா பிஸ்கட்களுடன் கொண்டாடுவதாக கூறுகிறார் மேவ். பின்னர் கிறிஸ்துமஸ் நாளில் அவர்கள் அன்பானவர்களுடன் கூடி, குடும்பமாக ஒன்றாக நேரத்தை செலவிடுவதாகவும் தெரிவிக்கிறார்.

“கிறிஸ்துமஸ் எனக்கு மிகவும் பிடித்தமானது, அது மிகவும் அற்புதமானது அல்லவா?” என்று கூறினார் மேவ்.

( பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *