2023ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரிஸ்(Rizz) தேர்வு!

 

2023ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரிஸ்(Rizz) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டுள்ளது.

சிறந்த வார்த்தைக்கான தேர்வில் இறுதியாக 8 வார்த்தைகள் பட்டியலிடப்பட்டது. 2023ம் ஆண்டு மக்கள் மனநிலை மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 8 வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இறுதி முடிவு எடுப்பதற்காக ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் இடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டத்தில் 2023ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரிஸ்(Rizz) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் இந்த ரிஸ்(Rizz) என்ற வார்த்தை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது, இவை பொதுவாக காதலை வெளிப்படுத்தல் அல்லது கவர்ச்சிக்கான வார்த்தையாக இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் அகராதி விளக்கம்
ரிஸ் என்ற சொல்லுக்கு, கவர்ச்சி, காதல், வசீகரம், ஸ்டைல் மற்றும் இணையரை ஈர்க்கும் திறன் என்பதாகும்.

ரிஸ்(Rizz) என்ற சொல் கரிஷ்மா(charisma) என்ற சொல்லின் மையப் பகுதியாகும். ரிஸ்(to Rizz up) என்ற சொல்லை வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *