இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலியின் சாய்ந்த கோபுரம்

இத்தாலியின் போலோக்னா நகரில் அமைந்துள்ள ‘சாய்ந்த கோபுரம்’ என்றும் அழைக்கப்படும் கரிசெண்டா கோபுரம், இடிந்து விழும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 ஆம் நூற்றாண்டிலிருந்து, 150 அடி உயர கோபுரம் 4 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. பல ஆண்டுகளாக, கோபுரத்தின் நிலையை பராமரிக்க இத்தாலியால் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், தற்போது கோபுரம் அளவுக்கு அதிகமாக சாய்ந்துள்ளதால், சிவில் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன்படி, கோபுரம் இப்போது “திடீரென இடிந்து விழும்” அபாயத்தில் உள்ளது.

கோபுரம் இடிந்து விழுந்தால், குப்பைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், சுற்றியுள்ள கட்டிடங்களின் பாதிப்பைக் குறைப்பதற்கும் ஒரு உலோக வளையம் நிறுவப்பட்டுள்ளது.

“இடிந்து விழுவதன் விளைவாக ஏற்படும் குப்பைகளைக் கட்டுப்படுத்தவும், சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைக்கவும் ஒரு பாதுகாப்பு வளைவு அமைக்கப்படும்” என்று நகர சபை தெரிவித்துள்ளது. ஷ

2019 ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தை கண்காணித்து வரும் அறிவியல் குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. பழங்கால கோபுரத்தின் அசைவுகளை அளவிடுவதற்கு அறிவியல் குழுவால் சென்சார்கள் நிறுவப்பட்டன.

அக்டோபர் 2023 இல் பதிவுசெய்யப்பட்ட அளவீடுகளை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள “சுருக்கத்தில்” எதிர்பாராத போக்கு காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியானவுடன், கோபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் நகராட்சி அதிகாரிகளால் மூடப்பட்டதுடன் அதற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.

அதிகாரிகள் கோபுரத்தை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *