37 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் மீண்டும் எழுதியவர் கைக்கே வந்து சேர்ந்த வினோதம்!

37 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று மீண்டும் எழுதியவர் கைக்கே வந்து சேர்ந்துள்ளது.

கடிதம் எழுதி கண்ணாடிக் குடுவைக்குள் போட்டு அதனை தண்ணீரில் வீசியெறிவதை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

நடுக்கடலில் தத்தளிப்பவர்கள் உதவி கேட்பதற்காக இது போல பாட்டிகளில் செய்திகளை எழுது அனுப்புவதை படங்களிலும் புராணங்களிலும் பார்த்திருப்போம்.

அப்படி அமெரிக்காவின் கென்டக்கி என்ற இடத்தை சேர்ந்த ட்ராய் ஹெலர் என்றவர் எழுதி அனுப்பிய கடிதம் 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவரிடமே வந்து சேர்ந்துள்ளது.

ட்ராய் 1985 ஆம் ஆண்டு, தனக்கு பத்து வயது இருந்தபோது கடிதம் ஒன்றை எழுதி அதனை பெப்ஸி பாட்டிலுக்குள் போட்டார். அதை ஃப்ளோரிடா கடலில் வீசியெறிந்துள்ளார்.

கடந்த நவம்பர் 13 அன்று புயல் ஏற்பட்டபோது இந்த குடுவை கரையொதுங்கியுள்ளது. புயல் ஓய்ந்த பின்னர் கரையோதுங்கிய குப்பைகளை இருவர் சுத்தம் செய்து வந்தனர். அப்போது அவர்கள் கையில் இந்த பெப்சி பாட்டில் கிடைத்தது

அவர்கள் அதனை வீட்டிற்கு எடுத்து வந்து திறந்து பார்த்தபோது அதற்குள் ஒரு கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் அதை எழுதிய நபர், அவரது முகவரி மற்றும் தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.

“இந்த கடிதத்தை கண்டெடுப்பவர்கள் என்னை தொடர்புகொள்ளவும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. குடுவையை கண்டுபிடித்தவர்கள் நீண்ட முயற்சிக்குப் பின்னர் கடிதம் எழுதிய நபரை கண்டுபிடித்தனர்.

முதலில் அவர்களது அழைப்பை ட்ராய் ஏற்கவில்லை. பின்னர் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதை படித்தவுடன் தான் தான் 37 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் திரும்ப கிடைத்திருப்பதை அவர் உணர்ந்துள்ளார்.

அவரது தற்போதைய முகவரி கண்டறியப்பட்டு அந்த கடிதம் அவரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *