“மலையக மக்களுக்கு நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக தண்ணி காட்டப்பட்டுள்ளது”

கௌரவ சபாநாயகர் அவர்களே

நமது நாட்டில் 12 மாவட்டங்களில் படர்ந்து வாழும் மலையக மக்களின் அவிபிருத்திகாக உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சி.  

இந்த அமைச்சுக்குப் பொறுப்பான கௌரவ அமைச்சருக்கும் அதன் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் எதிர்கால செயற்திட்டங்கள் வெற்றிபெற முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

கௌரவ சபாநாயகர் அவர்களே

இம்முறை வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு .மட்டும், பெரும் அநீதி இழைக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“அமைச்சரவையில் உள்ள, எல்லா அமைச்சுக்கும் நிதியை அகப்பையில் வழங்கிவிட்டு  – தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு மாத்திரம் – சொட்டுக் கரண்டியில் வழங்கி இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. ‘தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான இரண்டு அறிவிப்பு உள்ளது.  

ஒன்று, நிர்வாக செலவு என்ற பிரிவில் 534 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், மலையக அபிவிருத்தி அதிகாரசபைக்கு 23 மில்லியன் ரூபாவும் STMF மன்றத்திற்கு 140 மில்லியன் ரூபாவும் அமைச்சின் ஏனைய செலவுகளுக்கு 371 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அபிவிருத்தி என்ற அடிப்படையில் வெளிநாட்டு நிதி உட்பட மொத்தம் 5035 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. .. இதில், இந்திய வீட்டுத்திட்ட நிதி உதவி 3900 மில்லியன் ரூபா,  வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு 1,135 மி ரூபா
இதில், பெருந்தோட்ட பகுதி, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 100 மில்லியன் ரூபாவும்,  ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்கு 310 மில்லியன் ரூபாவும், வீடமைப்புக்கு 500 மில்லியன் ரூபாவும் இந்திய வீட்டுத்திட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 225 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நோக்கும்போது, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  மொத்த உள்நாட்டு ஒதுக்கீடு 33.784 மில்லியன் ரூபாவில் வெறும் 1,669 மில்லியன் ரூபா மாத்திரமே தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரியாகக் கூறினால், இந்த அமைச்சின் மொத்த உள்நாட்டு ஒதுக்கீட்டில் நூற்றுக்கு 4.9 சதவீதம் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கும் ஏனைய 95.1 சதவீதம் தேசிய நீர்வழங்கல் அமைச்சுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்குப் பெயர்தான் அமைச்சுக்கு உள்ளேயே பாரபட்சம் என்பதாகும்.”

“நீர்வழங்கல் அமைச்சுக்கு நிதியை அள்ளிக் கொடுத்த கைகளால் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு  கிள்ளியேனும் வழங்க இந்த அரசாங்கத்திற்கு மனமில்லை.” 

மாறாக, மலையக மக்களுக்கு நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக – “தண்ணி காட்டியுள்ளார்கள்” என்றே கூற வேண்டும்.  

அது மாத்திரமன்றி,, வெளிநாட்டு உதவி என்ற அடிப்படையில் இந்திய வீட்டுத்திட்ட நிதியாக 3,900 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் உள்ளது. 

இந்தியாவினால் வழங்கப்படும் 10,000 வீட்டு திட்டம், தமிழ் முற்போக்கு கூட்டணி நோர்வூட் மைதானத்தில் ஏற்பாடு செய்த – மாபெரும் கூட்டத்தில் இந்திய பிரதமர் அதிமேதகு  ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதே அறிவிப்பை, பலரும், கடந்த மூன்று – நான்கு வருடங்களாக மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். அண்மையில் மலையகம் 200 என்ற நிகழ்விலும் அதே அறிவிப்பை விடுத்துள்ளனர்

இப்படி ஆயிரம் தடவைகள் அறிவிப்பு வந்தாலும் –  இன்றுவரை பத்தாயிரம் வீடுகளை காணவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னராவது தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக் கொடுத்த பத்தாயிரம் இந்திய வீடமைப்பு திட்டம் மலையக மக்களை சென்றடையட்டும் என வேண்டுகிறேன்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 3,900  மில்லியன் ரூபாவில் சுமார் 1,500 வீடுகள்  2024 இல் கட்டப்படும் என  எதிர் பார்க்கும்  நிலையில், இது மொத்த வீட்டுத் தொகையில்  15%
மேலும்,  மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கவென நான்கு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி அவர்கள் வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தார்.

ஆனால், அந்த நான்கு பில்லியன் ரூபா தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

அத்துடன், காணி உரிமை வழங்கும் திட்டம் என்ன ? என்பதனை மலையக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். 

புதிதாக வீடுகள் அமைத்து காணி உரிமை வழங்கப்படுமா? அல்லது இருக்கும் லயன் வீடுகளுக்கு காணி உரிமை வழங்கப்படுமா? அல்லது வீடுகள் அமைக்காது தனியே காணி உரிமை வழங்கப்படுமா? என சம்பந்தப்பட்ட அமைச்சர் குறிப்பிட வேண்டும்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில், முன்னாள் அமைச்சர் திகாம்பரம் அவர்கள் தலைமையில் கட்டப்பட்ட வீடுகளை ஒரு சிலர் “குருவிக்கூடு” என ஏளனம் செய்தனர்.

ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கட்டப்பட்ட அதே 550 சதுர அடி அளவிலான தனி வீடுகளையே நிர்மாணித்து அண்மையில் நானுஓயா பகுதியில் மக்களிடம் கையளிக்கப்படது.

ஆனாலும், நாங்கள் ஒருபோதும் அதனை ‘‘குருவிக்கூடு என்றோ அல்லது கோழி குடாப்பு” என்றோ கேவலப்படுத்த மாட்டோம்.காரணம், ஒரு அங்குள நிலம், கூட உரிமையில்லாத – “ எட்டுக்கு எட்டு லயன் காம்பராக்களில்” முடங்கி கிடக்கும் மக்களுக்கு –  7 பேர்ச் காணியில் 550 சதுர அடி பரப்பில் இரண்டு அறைகள், ஒரு சாலை, நவீன சமையலறை, வீட்டுக்குள்ளேயே குளியலறை, என நவீன வசதிகளுடன் கூடிய தனி வீடு ஒன்று அமைத்துக் கொடுப்பது – எந்த அளவு பெறுமதியானது என்பதை நாம் அறிவோம்.

அதனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு முன்பு  சிலர் அதனை குருவிக்கூடு என விமர்சித்திருந்தாலும் நாங்கள் அப்படி அல்ல.

நிச்சயமாக,  நமது மக்களுக்கு தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும்

அனைத்து மக்களும் லயன் வீடுகளில் இருந்து வெளியே – கௌரவமான தனி வீட்டில் வாழ வைக்கப்பட வேண்டும். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. 

நல்லாட்சி காலத்தில், கௌரவ திகாம்பரம் அவர்கள் தலைமையில் – மலையக பெருந்தோட்ட மக்கள் வாழும் 12 மாவட்டங்களை மையப்படுத்தி விடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதில் மகாத்மா காந்தி புரம், நடேசைய்யர் புரம், மீனாட்சி அம்மாள் புரம், வி. கே.வெள்ளையன் புரம், முல்லோயா கோவிந்தன் புரம், ஏப்ரஹாம் சிங்கோ புரம், ராஜலிங்கம் புரம், வி.பி.கனேசன் புரம், அஸீஸ் புரம் , சந்திரசேகரன் புரம் என பல புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டது. 
அதேபோன்று, உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களும் – காலி, மாத்திறை களுத்துறை, , இரத்தினபுரி, கேகாலை,  குருநாகல், நுவரெலியா கண்டி, பதுளை, மொனராகலை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு – உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக – வெறும் 100 மில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 100 மில்லியனை 12 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளித்து அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்வது என்பது மிகவும் அசோகாரியமான விடயமாகும்.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத  விடயம்

அதேபோல, வீடமைப்பு திட்டத்திற்கு 500 மில்லியன் (200 க்கும்  குறைவான வீடுகளே கட்டமுடியும் ) ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆதனால், 12 மாவட்டங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த 500 மில்லியன் போதுமா ?  என்பதை இந்த அரசாங்கம் தாங்களே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும். 

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என்பதற்குள், பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி, என்ற ஒரு தனி பிரிவு – கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது. அதில், இராஜாங்க அமைச்சராக தமிழ் பேசும் ஒருவர்  இருக்கையில் – பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான காரணம் என்ன? 

ஏற்கனவே, மாகாண சபைகள் இருந்தபோது – தமிழ் கல்வி அமைச்சு என்ற போர்வையில்  பாடசாலைகளுக்குள் அரசியலைப் புகுத்தி – கல்வியை அரசியல் மயப்படுத்தி – முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தது
இப்போது இந்த நடவடிக்கை ஊடாக – மீண்டும் அரசியல் ரீதியான செயல்பாடுகளுடன் – பாடசாலைகளுக்கு நுழையும் போது – ஓரளவேனும் முன்னேற்றம் கண்டுவரும் மலையகத்தின்  கல்வித்துறை எவ்வாறான நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்பது கவலைக்குரிய விடயமாகும் 

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட சில வீடு திட்டங்கள் இன்னும் முழுமை பெறாமல் இருப்பதுடன் அதற்கான காணி உறுதி பத்திரங்களும் வழங்கப்படாமல் இருக்கிறது.

நல்லாட்சி காலத்தில் வழங்கிய காணி உறுதி பத்திரத்தை போலியானது எனவும் “வெறும் கார்ட்போர்ட் பத்திரம்“ எனவும் விமர்சனம் செய்தவர்கள் தற்போது, அதே காணி உறுதி பத்திரத்தையே அந்த மக்களுக்கு வழங்குகின்றனர்.

நாம் வழங்கிய காணி உறுதி பத்திரம்  போலியானது என்றால் இது என்ன ?
ஆகவே, நாங்கள் வழங்கிய காணி உறுதி பத்திரம் போலியானது  அல்ல என்பது இதிலிருந்து நிரூபனமாகிறது.

காணி உறுதி பத்திரம் வழங்குவதில் எவ்விதமான ஆச்சர்யம் கிடையாது.  மலையக மக்கள் நிலமுடைய சமூகமாக  மாற்றமடைய வேண்டும். 

எனவே, நல்லாட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கான காணி உறுதி பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். 

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தற்போது நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றது.
நல்லாட்சியில்  நான்கு வருட ஆட்சி காலத்தில் கிட்டத்தட்ட 6000 க்கும் அதிகமான தனி வீடுகளை கட்டப்பட்டன 
டன்சினன் மகாத்மா காந்தி புரம் – 400 பொகவந்தலாவ வி. கே.வெள்ளையன் புரம், – 300
ஹெல்பொட பகத்சிங் புரம் – 98
டயகம ஏப்ரகாம் சிங்கோ புரம் –  150
இப்படி கூறிக் கொண்டே போகலாம்.
ஆனால், இந்த அரசாங்கம் நான்கு வருடங்களில் எத்தனை வீடுகள் கட்டியது என்ற கேள்வியை நான் மலையக மக்களிடமே விட்டுவிடுகிறேன்.

இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையம் தருவாயில் இருக்கிறது அரசாங்கம் வீடு செல்வதற்கு இன்னும் சரியாக ஆறு அல்லது ஏழு
மாதங்களே உள்ளன.  இந்த ஆறு மாதங்களில் இவ்வளவு குறைந்த நிதியை வைத்துக்கொண்டு பெரிதாக எதனையும் சாதித்து விட முடியாது.
நான்கு வருடங்களில் செய்யாத்தை நான்கு மாதங்களில் செய்வார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *