Google Map காட்டிய குறுக்குவழி: பாலைவனத்தில் சிக்கி கொண்ட கார் ஓட்டுநர் குழு!

 

அமெரிக்காவில் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றவர்கள் பாலைவனத்தில் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கார் பயணிகள் குழு ஒன்று சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கூகுள் மேப்பின் குறுக்கு வழியை நாடியுள்ளனர்.

கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழி பாதை கரடு முரடாக இருந்தாலும், கூகுள் மேப்பின் மீது நம்பிக்கை வைத்து கார் ஓட்டுநர்கள் அந்த பாதையில் முன்னேறி சென்றுள்ளனர்.

ஆனால் இறுதியில் கூகுள் மேப் காட்டிய குறுக்குவழி அவர்களை நெவாடா பாலைவனத்திற்கு அழைத்து சென்று அதிர்ச்சியளித்துள்ளது.

வந்த வழியிலேயே திரும்பி சென்று விடலாம் என நினைத்தாலும், கார்களின் சக்கரங்கள் வெளியேற முடியாத நிலையில் மணலில் சிக்கிக் கொண்டுள்ளது.

இதனால் உதவிக்கு ட்ரக்கை வரவழைத்த குழுவினர் அவற்றின் உதவியுடன் காரை வெளியே எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *