இஸ்ரேலின் வெறியாட்டம்… சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடிய 5 நாடுகள்

பாலஸ்தீன பிராந்தியங்களில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுக்கும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி 5 நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனப் பகுதிகளில் நிலவும் மோசமான நிலைமையை விசாரிக்க ஐந்து நாடுகளின் கூட்டுக் கோரிக்கை மனு கிடைத்துள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வெறியாட்டம்... சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடிய 5 நாடுகள் | Five Nations Seek War Crimes Probe In Palestine@reuters

தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பொலிவியா, கொமோரோஸ் மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளில் இருந்து இந்த பரிந்துரை வந்ததாக சட்டத்தரணி கரீம் கான் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தென்னாப்பிரிக்கா தெரிவிக்கையில், பாலஸ்தீனத்தின் தீவிர சூழ்நிலையில் ஐசிசி அவசர கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

2014 ஜூன் 13ம் திகதி பாலஸ்தீனத்தில் இஸ்ரேல ராணுவத்தால் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பில் ஐசிசி விசாரித்து வருகிறது.

இஸ்ரேலின் வெறியாட்டம்... சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடிய 5 நாடுகள் | Five Nations Seek War Crimes Probe In Palestine@reuters

இந்த நிலையில் அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட போர் குற்றம் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேல் மட்டுமின்றி பாலஸ்தீனர்கள் முன்னெடுத்த போர் குற்றம் தொடர்பிலும் விசாரிக்கப்படும் என சட்டத்தரணி கரீம் கான் கூறியுள்ளார்.

ஐசிசி உறுப்பினராக இஸ்ரேல் இல்லை என்ற போதும் பிரத்யேக சூழலில் விசாரணை முன்னெடுக்கும் அதிகாரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு உண்டு என்றே கூறுகின்றனர். ஆனால் 2015 முதல் பாலஸ்தீன பிராந்தியங்கள் ஐசிசி உறுப்பினராக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *