கஹட்டோவிட்ட ஆசிரியைகளான இம்ரத் – ரயீஸா அதிபர்களாக நியமனம்

– ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )

அகில இலங்கை ரீதியாக அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்கப்பட்டோர் பெயர்ப் பட்டியலில், கஹட்டோவிட்ட பிரதேசத்தை பிறப்பிடமாகவும் இருப்பிடமாகவும் கொண்ட கலாநிதி ஜவாஹிருல் இம்ரத் மற்றும் ரயீஸா ரஸ்ஸாக் ஆகிய இரு ஆசிரியைகளும், அதிபர் சேவை – தரம் – 3 க்கு உயர்தர சித்தியுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான அதிபர் நியமனக் கடிதங்கள், கல்வி அமைச்சினால் அண்மையில் (04.11.2023) அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டன.
வதுறுகம – கூறுவமுல்ல மகா வித்தியாலயத்தில் உள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் ஆசிரியையாக 2015 ஆம் ஆண்டு முதல் 9 வருடங்களாக சேவையாற்றும் இம்ரத் ஆசிரியை, ஓய்வுபெற்ற ஆசிரியர்களான மௌலவி அப்துஸ்ஸலாம் மர்ஹூமா பழீலா பேகம் ஆகியோரின் புதல்வியாவார்.
திஹாரிய – தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையில் 2018 ஆம் வருடம் முதல் 6 ஆண்டுகளாகக் கடமை புரியும் ரயீஸா ஆசிரியை, மௌலவி அப்துர்ரஸ்ஸாக் – மர்ஹூமா சித்தி பௌஸியா ஆகியோரின் புதல்வியும், திஹாரிய – அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கணக்கியல் பாட ஆசிரியராகப் பணியாற்றும் எஸ்.எம். றிஸ்வானின் மனைவியுமாவார்.
கம்பஹா கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட இவ்விரு முஸ்லிம் பெண் ஆசிரியைகளும், இம்முறை அதிபர் நியமனத்துக்கு தெரிவாகி, கஹட்டோவிட்ட மண்ணுக்கு பேரும் புகழும் ஈட்டிக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *