இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பாடசாலை மீது தாக்குதல் : பலர்பலி

காசா நகரின் வடக்கே, சஃப்தாவி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒசாமா பின் ஜெய்த் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காசாவில் உள்ள அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய ஆகிய மூன்று மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து காயமடைந்த பாலஸ்தீனியர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ்கள் மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல், இதுவரை காசாவில் 9,227 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது, இதில் கிட்டத்தட்ட 3,826 குழந்தைகள் மற்றும் 2,045 பெண்கள் உள்ளனர், மேலும் 23,516 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பாடசாலை மீது தாக்குதல் : பலர்பலி | Israel Bombs Gaza School Over 20 Killed

பலஸ்தீன சுகாதார அமைச்சின் அறிக்கைகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *