மத்திய கிழக்கிற்கு மேலதிக படையை அனுப்புகிறது அமெரிக்கா!

 

வெடிகுண்டுகளை அகற்றுதல் மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் ஆதரவை வழங்குவதை மையமாகக் கொண்டு அமெரிக்கா மேலதிகமாக 300 துருப்புக்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புகிறது என்று பென்டகன் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பட்ரிக் ரைடர் கூறுகையில்,

எதற்காக மேலதிக படை
துருப்புக்கள் அமெரிக்காவில் இருந்து செல்லும், ஆனால் இஸ்ரேலில் இருக்காது. “அவை பிராந்திய தடுப்பு முயற்சிகளை ஆதரிப்பதோடு நமது படை பாதுகாப்பு திறன்களை மேலும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டவை” என்று கூறினார்.

அதிகரிக்கும் பதற்றம் : மத்திய கிழக்கிற்கு மேலதிக படையை அனுப்புகிறது அமெரிக்கா | Us To Send 300 Additional Troops To Middle East

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க துருப்புக்களுக்கு எதிராக இந்த மாதத்தில் 27 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *