இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு அமெரிக்காவே மூலகாரணம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பல நெருக்கடிகளுக்கு அமெரிக்காவே மூலகாரணமாக இருப்பதாகவும், அமெரிக்காவின் தலையீட்டால் இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 26 நாட்களாக தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் நடைபெற்று வருகின்றது, உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மறுத்துள்ளது.

அத்தோடு, போருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இஸ்ரேலிற்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.

போர் நிறுத்தம்

மேலும், போர் நிறுத்தம் என்றால் இஸ்ரேல் ஹமாஸிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திற்கு சரணடைய வேண்டும்.இது நடக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு அமெரிக்காவே மூலகாரணம்: புடின் பகிரங்க குற்றச்சாட்டு | Israel Vs Palestine America Cause Putin Accusation

இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையில் போர் நிறுத்தம் செய்யுமாறு ரஷ்யா இஸ்ரேலையும் ஹமாஸையும் வற்புறுத்தி வரும் வேளையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளித்து தற்போது தேவை போர் நிறுத்தம் அல்ல, காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதே என சுட்டிக்காட்டி வருவதாக புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *