போரில் திடீர் திருப்பம் : மொசாட் தலைவர் கத்தாருக்கு இரகசிய பயணம்

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைவர் டேவிட் பார்னியா கத்தாருக்கு இரகசிய பயணம் மேற்கொண்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியாகவே அவர் கத்தாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கு முன்னரும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு கத்தார் மத்தியஸ்தம் செய்தததாக தெரிவிக்கப்படுகிறது.

போரில் திடீர் திருப்பம் : மொசாட் தலைவர் கத்தாருக்கு இரகசிய பயணம் | Mossad Chief Barnea Flies To Qatar

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்த ஹமாஸ் அமைப்பினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்து 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *