உக்கிரமடையும் போர் – பலி எண்ணிக்கை 9000மாக அதிகரிப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 703 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், பலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *