நித்தியின் கைலாசா நாட்டில் பாலியல் தொல்லை வெளிநாட்டுப் பெண் புகார்!

நித்தியானந்தா தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வெளிநாட்டு பெண் ஒருவர் கர்நாடக போலீசாரிடம் இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது. அங்கு பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளிவந்த அவர் தலைமறைவானார்.

இதையடுத்து, இந்தியாவில் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, கைலாசா என்ற தீவை உருவாக்கியுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், யூடியூப் சேனலில் தின தினம் வீடியோ வெளியிட்டு பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றுவதோடு, சமூகவலைதளங்களில் அடிக்கடி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கைலசாவிலும் நிதியானந்தா மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரின் பிடதி பகுதி போலீசாருக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி இ- மெயில் மூலம் புகார் அளித்துள்ளார்.

அதில் கைலாசா என்ற நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என கூறியுள்ளார்.

இந்த புகாருக்கு பதிலளித்த் பிடதி போலீசார், இது போன்ற, இ-மெயில் புகார்காளை ஏற்க முடியாது. அதனால் நீங்கள் எந்த பயமும் இல்லாமல் இந்தியாவின் ஏதாவது ஒரு காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளியுங்கள் என பதில் அனுப்பி உள்ளனர். உங்களுக்கு முழு பாதுகாப்பை போலீசார் வழங்குவார்கள் என தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *