2024இல் மீண்டும் மோடியே பிரதமர் ஆகுவார்

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக தனது பாராளுமன்றத் தொகுதியான லக்னோவுக்கு சென்றுள்ள ராஜ்நாத் சிங் அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என நான் மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகளும் தெரிவித்து வருகின்றனன.

இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்தவராக மோடி திகழ்கிறார். மோடியின் ஆட்சியில் இந்தியா, பொருளாதார ரீதியாக பலமான நாடாக மாறியுள்ளது.

அதபோன்று இந்தியாவின் பாதுகாப்பும் மோடியின் ஆட்சியில் பலப்படுத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மீண்டும் மோடியை பிரதமராக்கவே மக்கள் விரும்புகின்றனர்.” – என்றார்.

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்திய சிங், “மஹரிஷி வால்மீகியின் ராமர் ஒரு ராஜா மட்டுமல்ல, ஒரு லோக் நாயகர் என்பது உலகம் முழுவதும் தெரியும், நானும் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *