பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது நெதர்லாந்து!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 68 ஓட்டங்களை ஸ்காட் எட்வர்ட்ஸ் பெற்றதுடன் வெஸ்லி பாரேசி 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில், 230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக மெஹிதி ஹசன் மிராஸ் 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், நெதர்லாந்து அணியின் பவுல் வென் மீகெரென் 23 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *