ஒரு மில்லியன் டொலர் பணத்தை ஹெலிகாப்டரில் இருந்து அள்ளி வீசிய பிரபலம்.!

 

செக் குடியரசு நாட்டின் தொலைக்காட்சி நிறுவனம் நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக்.

“Onemanshow: The Movie” எனும் நிகழ்ச்சியில் ஒரு மில்லியன் டொலர் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கொடுக்க ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார்.

ஆனால், அந்த கஷ்டமான புதிருக்கு விடையளிக்க கடினம் என்பதால், போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைவருக்கும், பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார். இதனால் ஒரு இடத்தை இலக்கு செய்து, அந்த இடத்தில் பணத்தை கொடுக்கப் போவதாக அறிவித்தார்.

அவர் சொன்னதுபோன்று, சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் பணத்தை வீசினார். அங்கு வந்திருந்தவர்கள் அந்த பணத்தை எடுத்துச் சென்றனர்.இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *