ஏறாவூர் மீராகேணி பிரதான வீதி பாலம் அபிவிருத்திக்கு முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் நிதி ஒதுக்கீடு.

 

ஏறாவூர் மீராகேணி பிரதான வீதி பாலம் அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 2.5 கோடி செலவில் அபிவிருத்தி செய்யப்படுவதற்காக விலை மனு கோரப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு இவ்வருடத்திற்குள் செய்து முடிக்கப்படவுள்ளது.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட் அவர்களின் அயராத முயற்சியின் பலனாக இதற்கான நிதியினை வீதி அபிவிருத்தி பெருந்தெருக்கள் அமைச்சு ஒதுக்கீடு செய்யதுள்ளது.மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்யைில் இவ்வேலை நடைபெறவுள்ளது.

ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத நிலையில் உள்ள மீராகணேி காபட் வீதி தொடர் அபிவிருத்திக்கான நிதி உலக வங்கி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைபறுவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னாள் அமைச்சர் நசீர் அகமட் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்தோடு ஏறாவூர் கென்ஷர் வைத்தியசாலை வீதியும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *