வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஐஸ்லாந்து பிரதமர்

வட அட்லாண்டிக் பகுதியில் உள்ள வட ஐரோப்பிய நாடான, ஐஸ்லாந்தில் ஆண்கள் பெறும் ஊதியத்தை விட 21 சதவீதம் குறைவாகவே பெண்கள் ஊதியம் பெறுகின்றனர்.

சுகாதார பணிகள், தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் பெண்களுக்கு ஊதியம் இன்னும் குறைவாக உள்ளது.

1975லிருந்து இது குறித்து 7 முறை போராட்டங்கள் நடத்தியும் அரசாங்கம் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் பெண்கள் அமைப்பினர் மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பெண்களுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஐஸ்லாந்து பிரதமர் | Iceland Prime Minister Joins Women On Strike

இதை தொடர்ந்து நேற்று(26) இந்நாட்டின் தலைநகரில் உள்ள அர்னார்ஹால் (Arnarholl) மலை மற்றும் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு அந்நாட்டின் பெண் பிரதமர் கேத்ரின் ஜேகப்ஸ்டாட்டிர் (Katrin Jakobsdottir) ஆதரவு தெரிவித்து, பணிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *