தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸூக்கு இடையேயான போர் 20 நாட்களாக நீடித்துள்ள நிலையில், ஹமாஸை ஒழிக்க இஸ்ரேல் இராணுவம் புதிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளது.

இதுவரை வான்வழி தாக்குதலை மேற்கொண்டுவந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய இராணுவம் காஸாவை அனைத்து பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்து தாக்கி வருகின்றது.

இதுவரை 5000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 40 வீதமானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவம் தரைப்படை நடவடிக்கைகளுக்கான அனுமதியை இதுவரை பெற்றிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் ஹமாஸை ஒழிக்க இஸ்ரேல் இராணுவம் புதிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளது. இஸ்ரேலிய தரைப்படைகள் வடக்கு காஸா பகுதிக்குள் நுழைந்து பல ஹமாஸ் நிலைகளை அழித்துள்ளன.

அத்துடன், இந்த தாக்குதலை நடத்திவிட்டு இஸ்ரேல் இராணுவம் தனது எல்லைக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸுடன் நடந்து வரும் போருக்கு மத்தியில் இது மிகப்பெரிய ஊடுருவல் என்று இஸ்ரேலிய இராணுவ வானொலிச் சேவை விவரித்துள்ளது. இந்த நடவடிக்கையின் காணொளியையும் இராணுவம் வெளியிட்டுள்ளது.

இதில் இஸ்ரேலிய வீரர்கள் எப்படி கவச வாகனங்களில் காஸா எல்லைக்குள் நுழைந்து பல ஹமாஸ் நிலைகள் மீது பீரங்கிகளில் இருந்து எறிகணைகளை வீசினார்கள் என்பதை காண முடிகின்றது.

இஸ்ரேலிய தாக்குதலில் பல இடிந்த கட்டிடங்களும் காணப்படுகின்றன. தாக்குதல் நடத்திய பிறகு இஸ்ரேலிய பீரங்களிகள் தமது எல்லைக்கு பாதுகாப்பாக திரும்பி வந்தன.

அடுத்த கட்ட போருக்கு தயாராகும் வகையில் இந்த ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் இராணுவம் தெரிவித்துள்ளது. இது இஸ்ரேலிய இராணுவத்தால் ஹமாஸை அழிக்கும் செயலாகும்.

எனினும், இது குறித்து ஹமாஸ் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

பலஸ்தீன அமைப்புகளான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகியவை இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் திகதி பாரிய தாக்குதலை நடத்தியன. இந்த தாக்குதலில் 1400 பேர் உயிரிழந்துள்ளனர்.

5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் 220 பொதுமக்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக காஸா பகுதியில் இஸ்ரேலின் கடும் குண்டுவீச்சு தாக்குதல் தொடர்கிறன. இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 6500 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 2700 பேர் குழந்தைகள் என்று காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது. அதே நேரத்தில், 17000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *