நெதர்லாந்து அணிக்கு த்ரில் வெற்றி!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் Lungi Ngidi, Marco Jansen, Kagiso Rabada ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

நெதர்லாந்து அணி சார்பில் Scott Edwards அதிகப்பட்ச 78 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 246 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்கை மட்டுமே பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் David Miller அதிகூடிய ஓட்டங்களாக 43 ஓட்டங்களை பெற்றார்.

நெதர்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் Logan van Beek, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இன்றையை போட்டியை மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *