23 ஆண்டுகளுக்கு பிறகும்… உலகை உலுக்கும் புகைப்படம்:

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகும் புகைப்படம் ஒன்று உலகை உலுக்கி வருகிறது.

உலக நாடுகளை உலுக்கிய புகைப்படம்

 

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இடையிலான போரினால் இரு தரப்பிலிருந்தும் பொதுமக்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுவரையான தரவுகளின்படி, பேரிழப்புகளை பாலஸ்தீன மக்களே எதிர்கொண்டுள்ளனர்.

23 ஆண்டுகளுக்கு பிறகும்... உலகை உலுக்கும் புகைப்படம்: காஸா போரினால் குடும்பத்தில் பலரை இழந்த நபர் | Gaza Pic Shocked The World He Lost More Familyfrom twitter

இந்த நிலையிலேயே காஸா பகுதியை சேர்ந்த Jamal Al-Durrah என்பவர் தொடர்பிலான புகைப்படம் ஒன்று 23 ஆண்டுகளுக்கு பின்னரும் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

கடந்த 7ம் திகதி தொடங்கி காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதலில், 4 குடும்ப உறிப்பினர்களை இழந்துள்ள Jamal Al-Durrah துக்கமனுசரித்து வருகிறார்.

காஸா பகுதியில் மட்டும் இதுவரை பலி எண்ணிக்கை 2,500 கடந்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்னர், இதுபோன்றதொரு நெருக்கடியான சூழலில் இரு தரப்பு துப்பாக்கி சண்டை இடையே தமது 11 வயது மகனுடன் தனியக் சிக்கிக்கொண்டார் ஜமால்.

23 ஆண்டுகளுக்கு பிறகும்... உலகை உலுக்கும் புகைப்படம்: காஸா போரினால் குடும்பத்தில் பலரை இழந்த நபர் | Gaza Pic Shocked The World He Lost More Family@getty

இரண்டாவது முறயாக பாலஸ்தீன மக்களின் எழுச்சி ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர், செப்டம்பர் 30, 2000ல் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.

அப்பாவி மக்களின் குடியிருப்புகள் மீது

இரு தரப்பு துப்பாக்கி சண்டையில் சிக்கிய ஜமால் தமது மகனை காப்பாற்ற போராடியுள்ளார். குறித்த சம்பவம் அப்போது களத்தில் இருந்த பிரான்ஸ் ஊடகவியளாளர் ஒருவர் பதிவு செய்து பின்னர் வெளியிட்டிருந்தார்.

11 வயதான முகமது தமது தந்தையின் பின்னால் மறைந்து கொண்டு பயத்தில் அழுதபடி இருந்துள்ளார். சில நொடிகளில் துப்பாக்கி வெடிக்க, குண்டடிபட்டு ஜமாலின் மடியில் சுருண்டு விழுந்துள்ளார் முகமது,

23 ஆண்டுகளுக்கு பிறகும்... உலகை உலுக்கும் புகைப்படம்: காஸா போரினால் குடும்பத்தில் பலரை இழந்த நபர் | Gaza Pic Shocked The World He Lost More Family@getty

பின்னர் காயங்கள் காரணமாக அந்த 11 வயது சிறுவன் பலியானான். இரு நாடுகளுக்கும் இடையேயான போரின் கொடூரத்தை அந்த புகைப்படம் உலக மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டியது.

பாலஸ்தீன மக்களின் இரண்டவது எழுச்சி என்பது 2005ல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் தரப்பில் இறப்பு எண்ணிக்கை 1,000 கடக்க, பாலஸ்தீன தரப்பில் 3,000 பேர்கள் கொல்லப்பட்டனர்.

முகம்து கொல்லப்பட்ட 23 ஆண்டுகளுக்கு பின்னர், ஜமால் தற்போது தமது 4 குடும்ப உறுப்பினர்களை இழந்த துயரத்தில் உள்ளார். இஸ்ரேலியர்கள் எப்போதும் ஹமாஸ் படைகளை குறிவைப்பதில்லை என கொந்தளித்துள்ள ஜமால்,

23 ஆண்டுகளுக்கு பிறகும்... உலகை உலுக்கும் புகைப்படம்: காஸா போரினால் குடும்பத்தில் பலரை இழந்த நபர் | Gaza Pic Shocked The World He Lost More Family

அவர்களின் இலக்கு எப்போதும் பாலஸ்தீன சிறார்கள், பொதுமக்கள் மட்டுமே என்றார். ராணூவ தளவாடங்கள் மீது குறி வைக்காத இஸ்ரேல் படைகள் அப்பாவி மக்களின் குடியிருப்புகள் மீது மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை இரக்கமின்றி பயன்படுத்தி வருவதாக ஜமால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *