இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: ஹமாஸ் பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

கடந்த பத்து நாட்களாக இஸ்ரேலிற்கும் காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் இருதரப்பிலும் பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை மொத்தமாக அழிப்பதற்காக காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தபோவதாக கூறி காசா மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் இந்த அச்சுறுத்தல் எங்களை பயமுறுத்தவில்லை. எனவும் ஹமாஸ் அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: ஹமாஸ் பகிரங்க அறிவிப்பு | Israel Hamas War Hamas Ready To Attack

அதேவேளை, குண்டு வீச்சை நிறுத்தினால்தான் வெளிநாட்டு பிணை கைதிகளை விடுவிப்போம். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து நாங்கள் பிடித்து வைத்த பிணை கைதிகள் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *