ரஜினியின் இறுதி படமா தலைவர் 171 ?

தமிழ் திரையுலகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகினராலும் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.

1977ஆம் ஆண்டில் 15 படங்களில் ரஜினி நடித்திருக்கின்றார். இவற்றுள் சிவகுமார் ஹீரோவாக நடித்த ‘கவிக்குயில்’படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தது.

அந்த ஆண்டில் மாபெரும் வெற்றி பெற்ற படம், எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘புவனா ஒரு கேள்விக்குறி’. இப்படத்தின் மூலம், அதுவரை ஹீரோவாக நடித்த சிவகுமார் வில்லனாகவும் வில்லனாக நடித்துவந்த ரஜினி ஹீரோவாகவும் நடித்திருந்தனர்.

சூப்பர் ஸ்டார்

இத்திரைப்படம் ரஜினியின் கலைப்பயணத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.அதுவரை ஸ்டைல் வில்லனாக நடித்த ரஜினி, எல்லா வித ரோல்களுக்கும் பொருந்துவார் என்பது எல்லோருக்கும்  புரியவைப்பதாக அமைந்தது.

ரஜினியின் இறுதி படமா தலைவர் 171 ? ரகசியத்தை பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Talks About Thalaivar 171 Movie

ஏரதாள 47 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக  தற்போது வரை நிலைத்து இருக்கிறார். இவர் நடிக்கும் கடைசி படம் குறித்து எப்போதும் ரசிகர்களுக்கு சந்தேகம் எழுவது வழமை தான். இதற்கு தீர்வு வழங்குவதாக பிரபல இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.

கோலிவுட் திரையுலகில் சில படங்களையே இயக்கி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் ‘நல்ல இயக்குநர்’ என்ற இடத்தை பிடித்துள்ளவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் உருவான கைதி,விக்ரம்., மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது.

ரஜினியின் இறுதி படமா தலைவர் 171 ? ரகசியத்தை பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Talks About Thalaivar 171 Movie

தற்போது, இவர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அண்மையில் வெளியாக நியைில்  இதையடுத்து அவர் இயக்கவுள்ள திரைப்படம்  ‘தலைவர் 171’.

தலைவரின் இறுதி படமா?

ரஜினியை ஹீரோவாக வைத்து இவர் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாதரிப்பில் உருவாகியிருக்கிள்ற இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லியோ படம் வெளியாக உள்ள நிலையில், இப்படம் குறித்த நேர்காணல் நிகழ்ச்சிகளில் லோகேஷ் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் இறுதி படமா இது என கேட்கப்பட்ட கேள்விக்கு லோகேஷ் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு தற்போது 72 வயதாகிறது. ரஜினிக்கு வயதாகி விட்டது என்று நினைக்கும் ரசிகர்கள் அவர் ஒப்பந்தமாகும்  படங்களை எல்லாம் கடைசி படம் என நினைக்கின்றனர்.

அப்படித்தான், ‘தலைவர் 171’ படத்தின் அப்டேட் வரும் போதும் நினைக்கின்றனர். ஆனால்  “கண்டிப்பாக இப்படம் அவரது கடைசி படம் அல்ல” என்ற பதிலை கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *