கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு – 99 பிரம்படிகள்?

 

பிரபலக் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவருக்கு 99 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்படலாம் என ஈரானிய ஊடகங்கள் சில தெரிவித்தன.

ஏற்கெனவே காதலி இருக்கும்போது அவர் ஓவியர் பாத்திமா ஹமீமியை அணைத்து முத்தமிட்டதற்காக அந்தத் தண்டனை எனக் கூறப்படுகிறது.

ஆசிய சேம்பியன்ஸ் லீக் போட்டிக்காக ரொனால்டோ அல்-நாசர் அணியுடன் ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றார்.

அப்போது ஹமீமி அவருக்கு இரு ஓவியங்களை அன்பளிப்பாக வழங்கினார். ஹமீமியின் உடல் 85 சதவீதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கால்களால் வரைபவர் என கூறப்படுகின்றது.

அன்பளிப்புகளுக்கு நன்றி கூறும் விதமாக ரொனால்டோ, ஹமீமியை அணைத்தார். அந்தக் காணொளியை அல்-நாசர் அணி தனது Instagram பக்கத்தில் பகிர்ந்தது.

எனினும் சில ஊடகங்கள், ஈரானில் ரொனால்டோவிற்கு 99 பிரம்படிகள் விதிக்கப்படலாம் என்பது பொய்த் தகவல் என்று கூறின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *