100 பந்துகள் கிரிக்கெட் போட்டி அறிமுகம்!

எத்தனை நாட்கள் ஆனாலும் வெற்றி என்ற முடிவு கிடைக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன்பின் நேரமின்மை காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட் 5 நாட்களாக குறைந்தது. டெஸ்ட் போட்டிக்குப்பிறகு ஒருநாள் கிரிக்கெட் அறிமுகமானது.

அதன்பின் 20 ஓவர் கிரிக்கெட் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு மிக அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து ரி 10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரவு எமிரேட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்துகள் போட்டியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், விளையாட்டு விதிமுறையை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இன்னிங்சும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை (Bowling End) மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக 5 அல்லது 10 பந்துகள் வீசலாம். அதிகபட்சமாக 20 பந்துகள் தான் வீச முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *