ஆம்லேட் சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு

இந்திய தலைநகர் டெல்லியில், 31 ஆம்லேட்டுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை தருவதாக கடைக்காரர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆம்லேட் போட்டி

அண்மைகாலங்களில் உணவு பிரியர்களுக்கு வித்தியாசமான முறையில் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் டெல்லியை சேர்ந்த ராஜிவ் என்ற கடைக்காரர் உணவு பிரியர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

ஆம்லேட் போட்டி / amblet

இவர், தனது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். அப்போது தான் ஆம்லேட் போட்டி வைக்கலாம் என திட்டம் போட்டுள்ளார்.

இந்த போட்டிக்கு சுமார் 31 முட்டைகளை ஆம்லேட்டுகளாக மாற்றி, அதனை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ரூ.1 லட்சம் பரிசு

இந்த ஆம்லேட்டுகளில் 31 முழு முட்டைகள், 50 கிராம் சீஸ், 450 கிராம் வெண்ணெய், 200 கிராம் பன்னீர், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகிய காய்கறிகள் அடங்கியுள்ளன. மேலும், பிரெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை ரூ.1320 ஆகும்.

இதை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு தருவதாக கடைக்காரர் ராஜிவ் அறிவித்துள்ளார். இந்த ஆம்லேட்டில் 3,575 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், இதை சாப்பிட்டால் பக்கவிளைவுகள் என்ன ஏற்படும் என தெரியாது என்பதால் இது போன்ற போட்டிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *