ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள பிரபல வர்த்தகர்

ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பிரபல வர்த்தகரொருவர் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா என்பவரே இவ்வாறான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என்ற வதந்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ள பிரபல வர்த்தகர் | Sl Presetential Election 2023 Dhammika Perera

“51% வாக்குகளை மொத்த வாக்குளாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அதிபர் தேர்தல் போரில் ஈடுபடுவேன்.

பெரும்பான்மைக் கட்சிகள் தாம் வேட்புமனுத் தாக்கல் செய்வதில் இணக்கம் காணும் பட்சத்தில் அது தனது தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் உந்துதலாக அமையும்.” என்றார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் எந்தக் கட்சியிலிருந்து களமிறங்குவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *