Alphabet Inc மூலம் தொலைத்தொடர்பு ஜாம்பவான்களுக்கு அபராதம்

தென் கொரியாவின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளரான Alphabet Inc இல் Google மற்றும் Apple ஆகியவற்றின் மேலாதிக்கச் சந்தை நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 50.5 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கத் தயாராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரியாவின் தொலைத் தொடர்பு ஆணைக்குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில், Google மற்றும் Apple என்பவை ஆப் டெவலப்பர்களை குறிப்பிட்ட கட்டண முறைகளுக்கு கட்டாயப்படுத்தும் நிலையில் பயன்பாட்டு மதிப்பாய்வில் தாமதத்தை ஏற்படுத்தியதாக வெளிநாட்டு ஊடங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இது குறித்து Google நிறுவனம் , இறுதி எழுத்துப்பூர்வ முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை மதிப்பிடும் என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் Apple இன்னும் இது தொடர்பில் பதிலளிக்கவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டில், தென் கொரியா தொலைத்தொடர்பு வணிகச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது, இது ஆப் ஸ்டோர் ஆபரேட்டர்களை மென்பொருள் உருவாக்குநர்கள் தங்கள் கட்டண முறைகளைப் பயன்படுத்த கட்டாயப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *