மூன்று கண்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்!;

டெங்கு காய்ச்சல், அமெரிக்காவின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் பாதிக்கும் என்று உலகச் சுதாதார ஸ்தாபனத்தின் விஞ்ஞானி கூறியுள்ளார்.

மேற்குறித்த நாடுகளில் உள்ள வெப்பநிலையானது கொசுக்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் சூழலை அதிகரிக்கிறது.

லத்தின் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய நிலையில் இந்நோய் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் எட்டு மடங்கு கூடிவிட்டது. மக்கள் நகரங்களில் அதிகம் குடியேறுவதும் பருவநிலை மாற்றங்களும் இதற்கு காரணமாக உள்ளன.

பல டெங்கு காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போய்விடுகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 4.2 மில்லியன் டெங்கு சம்பவங்கள் உலக அளவில் பதிவாகின.

பொதுச் சுகாதார அதிகாரிகள் இந்த ஆண்டு எல்லைமீறி டெங்கி காய்ச்சல் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். தற்போது, பங்களாதேஷ் மிகவும் மோசமான டெங்கு காய்ச்சல் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. அங்கு இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் டெங்கிக்கு உயிரிழந்துவிட்டனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஜெரமி ஃபாரார், டெங்கிக்கு எதிராக வலுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவர் உலக சுகாதர அமைப்பில் 2023ம் ஆண்டு மே மாதம் இணைந்தார். பல பெரிய நகரங்களில் வரப்போகும் கூடுதல் நெருக்கடிகளை எதிர்காலத்தில் கையாளுவதற்கு நாடுகளைத் தயார்படுத்த வேண்டும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *