ஜோ பைடனின் உரையில் குறுக்கிட்ட பெண் : காசாவில் யுத்த நிறுத்தம் வேண்டி கோரிக்கை!

அதிபர் அவர்களே நீங்கள் யூதமக்கள் குறித்து அக்கறை காண்பிக்கின்றீர்கள் யூத மத தலைவர் என்ற வகையில் நீங்கள் உடனடியாக இங்கேயே யுத்தநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவேண்டும் என ஜோ பைடனிடம் பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் மினெசொட்டாவில் அதிபர் ஜோ பைடன் உரையாற்றிக்கொண்டிருந்தவேளை குறுக்கிட்ட பெண்ணொருவரே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 இடைநிறுத்தம் அவசியம்

அங்கு காணப்பட்டவர்கள் அந்த பெண்ணை தொடர்ந்தும் பேசவிடமால் தடுக்க முயன்ற போதிலும் உடனடியாக பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர், நாங்கள் இடைநிறுத்தம் அவசியம் என கருதுகின்றோம் கைதிகளை மீட்பதற்கு என தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனின் உரையில் குறுக்கிட்ட பெண் : காசாவில் யுத்த நிறுத்தம் வேண்டி கோரிக்கை! | Biden Interrupted Protester Ceasefire In Gaza

இது குறித்து பின்னர் விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை அதிபர் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் குறித்தே இவ்வாறு குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளது.

இதன்போது, கேள்வி எழுப்பிய பெண்ணை பாதுகாப்பு தரப்பினர் அழைத்து சென்று வெளியேற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *