எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் முதியோர் இல்லங்களில் வாழ்கின்றனர்

பராமரிப்பை இழந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 349 முதியோர் இல்லங்களில் 8,806 முதியவர்கள் இவ்வாறு வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 5,624 தாய்மார்களும் 3,182 தந்தைமார்களும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் பராமரிப்பு இன்றி முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,242 முதியவர்கள் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் 1,071 முதியவர்களும் வடமேல் மாகாணத்தில் 809 முதியவர்களும் சமரகமுவ மாகாணத்தில் 789 முதியவர்களும்வடமாகாணத்தில் 756 முதியவர்களும் இவ்வாறு இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், 70 வயதிற்கும் மேற்பட்ட 416,667 பேர் முதியோர் உதவித்தொகையை பெறுவதாக தேசிய முதியோர் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் இதய நோயினால் பாதிக்கபப்ட்ட முதியவர்களுக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாவிற்கு உட்பட்ட நிதிவசதியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் முதியவர்களின் உளநல மேம்பாட்டுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *