அமேசான் காடுகளில் நிலவும் வறட்சி : நூற்றுக்கும் மேற்பட்ட டொல்பின்கள் உயிரிழப்பு

பிரேசிலின் அமேசான் காடுகளில் நிலவும் வறட்சி காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட டொல்பின்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு டொல்பின்கள் உயிரிழந்த இடங்களில் வெப்பநிலை 102 டிகிரி ஃபரனைட்டை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏழு நாட்களில் உயிரிழந்த டொல்பின்கள் அனைத்தும் Tefé ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய அதிக உயிரிழப்பு எண்ணிக்கை அசாதாரணமானது என்றும், அதிக ஏரி வெப்பநிலை மற்றும் அமேசானின் வரலாற்று வறட்சி நிலைகள் காரணமாக இருக்கலாம் என்றும் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Drought in the Amazon
Drought in the Amazon

உலகின் மிகப்பெரிய நீர்வழிப்பாதையாக விளங்கும் அமேசான் காடுகளில் வறண்ட காலநிலை காரணமாக தற்போது பல விலங்கினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சூழ்நிலையில், எஞ்சியிருக்கும் டொல்பின்களை மீட்பது கடினமானது மற்றும் எளிதான செயல்பாட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அமேசானில் வறட்சி பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள 59 நகராட்சிகள் இயல்பை விட குறைவான நீர்மட்டத்தை அடைந்துள்ளன.

இது ஆற்றில் போக்குவரத்து மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளது.

இருப்பினும், அதிகாரிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் இன்னும் கடுமையான வறட்சியை எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலைமை டொல்பின்களை மேலும் கொல்லக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *