25ஆவது ஆண்டில் கால்பதிக்கும் கூகுள்

இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து ஜொலித்து கொண்டிருக்கும் நிறுவனம் கூகுள்.

தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது.

கூகுளின் பிறந்த நாளையொட்டி  சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. 👇

செப்டம்பர் 27, 1988 அன்று கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டது.

கூகுள் நிறுவனத்தை செர்ஜி ப்ரின் மற்றும் லேரி பேஜ் இணைந்து துவங்கினர்.

தற்போது உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் தேடுப்பொறியாக கூகுள் உயர்ந்து இருக்கிறது.

கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

கூகுள் நிறுவன‌ம் பல்வேறு தொழில்களில் கிளை பரப்பியுள்ள நிலையில், இதன் மொத்த தொழில்களும் ஆல்ஃபாபெட் என்ற குடையின் கீழ் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *