கொரோனா நோய்த் தாக்கத்தை அதிகரிக்கும் புகையிலைப் பாவனை!


இறைவன் மனிதனை அழகாகவும் அறிவுடையவனாகவும் படைத்து, நோயின்றி சுகவாழ்வு வாழவேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களையும் வசதிகளையும் பூமியில் ஏற்படுத்தியுள்ளான்.

ஆனால் அவன் தனது கையினாளேயே தீங்கினைத் தேடிக் கொண்டு மற்றவர்களுக்கும் தீங்கிழைப்பவனாக மாறிவிட்டான். இதைத்தான் அல்குர்ஆன் ‘உங்களின் கைகளால் நாசத்தை தேடிக் கொள்ளாதீர்கள்’ என்று குறிப்பிடுகிறது.

மனிதன் தனது கையினால் தனக்கு தீங்கினை தேடிக்கொள்ளும் செயல்களாக புகையிலை மற்றும் போதைப் பொருள் பாவனைகளைக் குறிப்பிடலாம். இவ்வாறான புகைத்தல் பாவனை இரட்டைப்பாதிபபினை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தற்போது உலகம் முழுவதும் திடுக்கிடச் செய்து உயிர்களையும் பறித்துக் கொண்டிருக்கும் COVID-19 புகைப்பவர்களின் உடலில் கடுமையான நோயை உருவாக்குவதுடன் அதிக இறப்புக்கும் காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றது. COVID-19 தொற்று ஏற்படும் போது அது நுரையீரலைப் பாதிப்புக்குள்ளாக்கி அதன் செயற்பாட்டுத் திறனைக் குறைப்பதால் ஆபத்தான நோய்நிலைகளையும் ஏற்படுத்துகின்றன. இதனால் உலகில் கோரோனா இறப்புக்களை குறைப்பதற்கு புகைப்பிடிப்பவர்களை அதில் இருந்து வெளியேற்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை WHO வலியுறுத்தி கூறியுள்ளது.

ஒருவர் சிகரட் புகையினை உள்ளெடுத்து 20 நிமிடங்களினுள் இதயத்துடிப்பு மற்றும் குருதியோட்டம் அதிகரிக்கின்றது. 12 மணி நேரத்தில் இரத்தத்தில் கார்பன் மோனொக்சைட்டு அளவு அதிகரிக்கும். 2 தொடக்கம் 12 வாரங்களுக்குள் நுரையீரலின் செயற்பாடு அதிகரித்து 1 தொடக்கம் 9 மாதங்களுக்குப் பிறகு இருமல் மூச்சுத்திணறல் அதிகரிக்கின்றது. இதனால் நியுமோனியா சுவாச நோய் ஏற்படுகின்றது.

புகைப்பிடிப்பவர்கள் சிகரட்டினை தங்களின் விரல்களினால் பிடித்து வாயில் வைத்து உறுஞ்சும் போது கையில் உள்ள COVID-19 கிருமிகள் தொற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. இதனால் WHO மற்றும் உலகிலுள்ள நாடுகளின் சுகாதாரப் பிரிவினர் புகைத்தலைக் கட்டுப்படுத்துவதனால் கோரோனா நோய்த்தாக்கத்தினைக் குறைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, புகையிலைப் பாவனைகளை இல்லாதொழித்து கோரானா நோயினால் ஏற்படும் உயிராபத்திலிருந்து அனைவரையும் பாதுகாக்க ஒன்றினைவோம்.

NM.Nouzath. BA,
Dip in Counseling, Dip. in Sp. Edu
Psychological Counselor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *