உலக வரலாற்றில் பதிவாகிய மிக உயர்ந்த கடன்!

 

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உலகளாவிய கடன் 307 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச நிதி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது.

இது வரலாற்றில் பதிவாகிய மிக உயர்ந்த உலகளாவிய கடனாக கருதப்படுகிறது.

வங்கிக் கடனைக் குறைக்கும் வகையில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், இந்தக் கடன் தொகை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளில் கடன் வாங்குவது இந்த உலகளாவிய கடன் அதிகரிப்பில் பெரிதும் பங்களித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் உலகளாவிய கடன் அதிகரிப்புக்கு 80 சதவீதம் பங்களித்துள்ளன.

சர்வதேச நிதி நிறுவகத்தின் தகவலின்படி, 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய கடன் 10 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக உலகளாவிய கடன் 100 டிரில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய கடன் அதிகரிப்புடன், 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கடனுக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 336 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச நிதி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *