இந்திய நாணயத்தாள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

 

புழக்கத்திலுள்ள 2000 ரூபாய் நாணயத்தாள்களை மீளப் பெறுவது தொடர்பில் கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், பொது மக்கள் தம்வசம் வைத்திருக்கும் 2000 ரூபாய் இந்திய நாணயத் தாள்களை இந்திய வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளும் இறுதித் திகதி செப்டெம்பர் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவனையிலிருந்த 6.73 இலட்ச கோடி ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த 2000 ரூபாய் நாணய புழக்கம், 2023 மார்ச் மாதத்தில் ரூ. 3.62 இலட்ச கோடி ரூபாயாக குறைவடைந்துள்ளதாக அறிவித்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் புழக்கத்திலுள்ள ஏனைய நாணயத் தாள்கள் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள போதுமானதாக அமைந்திருக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மர்ம மரணம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மர்ம மரணம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இந்நிலையில், 2000 ரூபாய் நாணயத்தாளை மீளப் பெறுவது தொடர்பான அறிவித்தல் வெளியாகிய முதல் 20 நாட்களுக்குள் புழக்கத்திலிருந்த சுமார் 50சதவீதமான நாணயத்தாள்கள் வங்கிகளுக்கு கிடைத்திருந்ததாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக, இந்தியா முழுவதிலும் காணப்படும் 19 ரிசர்வ் வங்கி கிளைகள் மற்றும் எந்தவொரு வங்கிக் கிளைகளிலும் இந்திய 2000 ரூபாய் தாள்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம், அல்லது வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளில் வைப்புச் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *