கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் மீது ICC வழக்கு!

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் சபை  ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக்கின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அணியின் இணை உரிமையாளர்கள் Krishan Kumar Chaudhary மற்றும் Parag Sanghvi  மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், துடுப்பாட்ட பயிற்சியாளர் Ashar Zaidi, உதவி பயிற்சியாளர் Sunny Dhillon மற்றும் அணியின் மேலாளர் Shadab Ahamed ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட வீரர்களில் இலங்கையின் முன்னாள் முதல்தர வீரரான சாலிய சமந்தாவும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இது தவிர, அந்நாட்டு உள்ளூர் கிரிக்கெட் வீரர் ரிஸ்வான் ஜாவேத் மற்றும் பங்களாதேஷ் வீரர் நசீர் ஹொசைன் மீதும் ஐசிசி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *