நோர்வே தேர்தலில் இலங்கையர்களான தந்தையும், மகளும் வெற்றி!

 

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளும் நோர்வே – ஒஸ்லோ தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இருவரும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் தேர்தலில் களமிறங்கினார்கள்.

உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகளை அடுத்து, அனீஸ் ரவூப் மற்றும் அவரது மகளான தமீனா செரிப்டீன் ரவூப் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது தேர்தல் வெற்றி குறித்து, தொழிலாளர் கட்சியில் போட்டியிட்ட தமீனா கருத்துக் கூறுகையில்,

நோர்வே தலைநகர் இங்கே நான் ஒஸ்லோவை இன்னும் சிறந்த, பாதுகாப்பான மற்றும் பசுமையான நகரமாக மாற்றுவதற்குப் போராடுவதற்குப் பெரிய திட்டங்களை வைத்திருக்கிறேன் என குறிப்பிட்டு, எனக்கு வாக்ளித்த சகலருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பல்வேறு தரப்பினரின் ஆதரவை பெற்றுள்ள தமீனா, நோர்வே தொழிலாளர் கட்சியின் ஆவோசகராகவும் பணியாற்றி வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நோர்வேயின் முதல் வெளிநாட்டு பிரதமராக வரவேண்டும் எனவும் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவனான அனீஸ் ரவூப், சமூக மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தந்தையும், மகளும் (இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஜோன் கீழ்ஸ்) ஆகிய நிறுவனங்களின் முன்னர் நிறைவேற்று அதிகாரியாக இருந்த எம்.ஸீ. ரவூப் அவர்களுடைய மகனும், பேத்தியும் ஆவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *