இலங்கையில் 97 வயதான மூதாட்டியின் அசத்தல் சாதனை

 

இலங்கையில் 97 வயது மூதாட்டி ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தில் பாலி பௌத்த கற்கைகள் முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பௌத்த கற்கையிலேயே அவர் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார்.

களனிப் பல்கலைகழகத்தில் கற்கும் மூத்த மாணவியும் இவர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

அஸ்லின் தர்மரத்ன எனும் குறித்த மூதாட்டி தனது 94வது வயதில் வித்யோதயா பல்கலைக்கழகம் நடத்திய திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்.

இறுதித் தேர்வு எழுதும் போது அவர் 6 பெண் பிள்ளைகளின் தாய் என்பதுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

1952 ஆம் ஆண்டு பத்திர துறைப் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பெண்மணி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *