இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது உலகக் கிண்ணம்

ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில் இன்று முதல் இரண்டு தினங்களுக்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான வர்த்தக நிலையங்களில் ஒன்றான உலக வர்த்தக நிலையத்தில் இன்று காலை 9.00 மணிக்கு காட்சிக்கு வைக்கப்பட்ட உலகக் கிண்ணத்தை பிற்பகல் 2.00 மணிவரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

அதன் பின்னர் One Galle Face கட்டடத் தொகுதியில் பிற்பகல் 3.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.

செப்டெம்பர் 15 ஆம் திகதி இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் பிரசன்னத்துடன் உலகக் கிண்ணம், ஊடகவியலாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.

20 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலகக் கிண்ணம் இங்கிருந்து உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில் இன்று முதல் இரண்டு தினங்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான வர்த்தக நிலையங்களில் ஒன்றான உலக வர்த்தக நிலையத்தில் இன்று காலை 9.00 மணிக்கு காட்சிக்கு வைக்கப்பட்ட உலகக் கிண்ணத்தை பிற்பகல் 2.00 மணிவரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

அதன் பின்னர் One Galle Face கட்டடத் தொகுதியில் பிற்பகல் 3.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை காட்சிக்கு வைக்கப்படும்.

செப்டெம்பர் 15 ஆம் திகதி இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் பிரசன்னத்துடன் உலகக் கிண்ணம், ஊடகவியலாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.

20 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலகக் கிண்ணம் இங்கிருந்து உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *