அரசாங்கத்தின் மீது பாரிய தாக்குதல்
2023 மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரை, அமைச்சரவை அலுவலகம் உட்பட, “gov.lk” மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் பாரிய மென்பொருள் தாக்குதலைத் தொடர்ந்து தரவுகளை இழந்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான வைரஸ் சுமார் 5000 மின்னஞ்சல் முகவரிகளை பாதிக்கலாம் என ICTAவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, இந்த காலகட்டம் தொடர்பான தரவுகளை இழக்கும் அபாயம் உள்ளது என்கிறார்.
அமைச்சரவை அலுவலகம் இலங்கை அரசாங்க வலையமைப்பின் (LGN) நிறுவனங்களில் ஒன்றாகும்.
தாக்குதலைத் தொடர்ந்து, தினசரி ஆஃப்லைன் காப்புப்பிரதியைத் தொடங்கவும், வைரஸ் தாக்குதல்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்புடன் சமீபத்திய பதிப்பிற்கு பயன்பாட்டை மேம்படுத்தவும் ICTA நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலங்கை கணினி அவசர பதில் மன்றம் (SLCERT) தொலைந்து போன தரவுகளை மீட்பதற்காக ICTA உடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாக மகேஷ் பெரேரா மேலும் தெரிவித்தார்.