இலங்கையில் இந்திய போர்க் கப்பல்!

இந்திய கடற்படையின் ‘INS Delhi’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு வரவேற்பு அளித்தனர்.

கேப்டன் அபிஷேக் குமார் (Captain Abhishek Kumar) மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் த சில்வா தலைமையில் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று காலை உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.

மேலும், ‘INS Delhi’ என்ற கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, ​​இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில், அதன் முழு கடற்படையினரும் பங்கேற்கவும், பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பாடசலை மாணவர்களுக்கு ‘INS Delhi’என்ற கப்பலை பார்வையிடவும், கப்பலில் பயிற்சி பரிமாற்ற நிகழ்ச்சி நடத்தவும் வாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 03 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படும் நேரத்தில் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் கடற்படை பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *