மதுரை ரயிலில் தீ, 9 பேரின் உடல்கள் மீட்பு – விபத்து எப்படி நடந்தது..?

 

மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக வந்திருந்தோர் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 8 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரண்டு பெண்கள், 4 ஆண்கள் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளது ரயில்வேத் துறை.

அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறிய ரயிலில் இருந்த பெண் பயணி ஒருவர், சில பயணிகள் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் போட முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார்.

ரயிலில் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ரயிலில் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, கேஸ் சிலிண்டர், கன் பவுடர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்யக்கூடாது.

ரயிலுக்குள் அடுப்பு, கேஸ், ஓவன் போன்றவற்றை பற்றவைக்கக் கூடாது. அதே நேரத்தில், ரயில் பெட்டியிலோ அல்லது ரயில் நிலையத்திலோ சிகரெட்டைப் பற்ற வைக்கக்கூடாது.

ரயிலில் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறினால், ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நன்றி: BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *