99ஸ்மாட் போன்களை ஒரே நேரத்தில் கூகுள் மேப்ஸ் செயலியை செய்த நபர்

99 ஸ்மார்ட் போன்களில் ஒரே நேரத்தில் கூகுள் மேப் செயலியை ஓப்பன் செய்த ஜேர்மனியர் ஒருவர், எல்லா போனையும் ஒரு தள்ளு வண்டியில் ஒன்றாக போட்டு பேர்லின் நகர வீதிகளில் அதை இழுத்துச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தார்.
இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக ஒரே நேரத்தில் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் வெறுமையாக கிடந்த பேர்லின் வீதிகள் அனைத்திலும் வீதி நெரிசலைக் குறிக்கும் சிவப்பு வரிகள் கூகுள் மேப்பில் தோன்றியது.
பச்சை நிறத்தில் காணப்பட்ட பேர்லின் வீதிகள் எல்லாம் சிவப்பாக மாறியதால் கூகுள் மெப்பை உபயோகிப்பவர்கள் திகைத்தனர். சைமன் வெக்கெர்ட் ( Simon Weckert ) என்ற ஜேர்மனைச் சேர்ந்த ஓவியர் எதற்காக கூகுள் மெப்பை ஏமாற்றி இந்த விளையாட்டை நடத்தினார் என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *