உலக பணக்கார 3 முக்கியஸ்தர்களின் மரணம் கற்றுத்தரும் பாடங்கள்!

 

2011 இல் தனது 67 வயதில் காலமான அல் நாசர் அல் கராபி –AL NASAR AL GHARAFI அவர்கள் குவைத் நாட்டைசேர்ந்த பெரும் வியாபாரி, பணக்காரர், குவைத்தின் பொருளாதாரத்தில் பெரும் பங்குவகித்தவர். அவரின் சொத்து மதிப்பு USD 10.4 பில்லியன்கள் ஆக இருந்தாலும் அவர் மரணித்தபின் ஒரு சதத்தையும் எடுத்துச்செல்லவில்லை.

உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமான BURJ KHALIFA இன் உரிமையாளர் Khalifa bin Zayed Al Nahyan அவர்கள் ஐக்கிய அரபு ராச்சியத்தின் முன்னால் அமீர். அவரின் இமார் சொத்துக்கள் நிருவனத்திற்கு இம்மாபெரும் வானுயர்ந்த கட்டிடம் உரிமையாகும்.

838 M உயரமும் 163 மாடிகளைக்கொண்டதுமான இக்கட்டிடத்தின் பெருமதி 1.5 USD BILLION. அவரின் சொத்து மதிப்பு 830 USD பில்லியன்கள். ஆனால் 2022 இல் அவரும் மரணித்தார், ஆனால் அவராலும் ஒரு சதத்தையும் மண்ணறைக்கு கொண்டுபோகவில்லை. எல்லா முஸ்லிம்களைபும் போலவே எந்தவிதமான ஆடம்பரமுமில்லாத வெறும் தரையில் அடக்கம் செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் பிரபல சைக்கிள் நிருவனமான SOHRAB CYCLE COMPANY இன் உரிமையாளர் செய்க் முஹம்மத் அக்ரம் தனது 86 வயதில் காலமானார். அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் தனது பிள்ளைகளை பார்க்க ஆசைப்படுவதாக அவரைச்சுற்றியிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் பலதடவை கூறினார்.

ஆனால் அவரை பார்க்க குடும்பத்தினர்கள் வரவில்லை. மரணமடைந்து சிலமணிநேரம் கழித்தே உறவினர்கள் ஜனாசாவை பொறுப்பேற்றதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; இறை விசுவாசிகளுக்கு இறைவனின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

(அல்குர்ஆன் : 57:20)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *