வட கொரியாவில் பட்டினியால் வாடும் மக்கள்!

வட கொரியாவின் பொருளாதாரம் மோசமடைந்துள்ள சூழலில், அங்குள்ள மக்கள் மிகுந்த விரக்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமைப் பிரிவுத் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk) இதனை கூறியுள்ளார்.

வட கொரியாவின் சில பகுதிகளில் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் “2017க்குப் பிறகு வட கொரியாவில் மனித உரிமைகள்” எனும் கூட்டத்தில் திரு. வோல்கர் பேசினார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் (Linda Thomas-Greenfield) தலைமையில் கூட்டம் நடந்தது.

சட்ட விரோதமாக ஆயுதத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வட கொரியா அடிப்படைச் சுதந்திரத்தை மறுக்கிறது என்று திருவாட்டி கிரீன்ஃபீல்ட் சாடினார்.

வட கொரியாவுக்கு எதிரான கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த சீனா, பியோங்யாங்கை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவதில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *