இருபது ஆண்டு காலமாக மலம் கழிக்காமல் இருந்த பெண்!

மனிதர்களாகிய நாம், நம் உடலில் சேரும் கழிவுகளை சரியான முறையில் மலத்தின் வழியாகவோ அல்லது சிறுநீரின் வழியாகவோ முறையாக வெளியேற்றினாலே நம் உடலில் வரும் பாதி நோய்கள் குறைந்து விடும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

ஆனால் சீனாவை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டு காலமாக மலம் கழிக்காமல் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை தற்பொழுது உலகெங்கிலும் ஏற்படுத்தி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக அந்த 53 வயது சீனப் பெண் மலம் கழிக்காமல் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவருக்கு மிக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய துவங்கிய மருத்துவர்கள், தொடர்ச்சியாக மூன்று அறுவை சிகிச்சைகளை அவரது வயிற்றில் மேற்கொண்டுள்ளனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள Zhejiang பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு அந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றில் உள்ளதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் சுமார் மூன்று அடி நீளத்திற்கு ஒரு பெரிய கால்பந்தின் அளவில் சுமார் 20 கிலோ கழிவுகள் அவருடைய வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இத்தனை நாள் இந்த பெண்மணி எப்படி இந்த கழிவுகள் தாங்கி வாழ்ந்து வருகின்றார் என்ற ஆச்சர்யத்தில் அவர்கள் உறைந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *