மாத சம்பளத்தை அதிகமாக வழங்கும் நாடுகள்!

பொருளாதார நெருக்கடிக்குள்ளாக பயணித்து கொண்டிருக்கும் எம் அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே எண்ணம் வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டிற்கு சென்று விடுவேன் என்பதுதான்.

காரணம், ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் எமது நாட்டின் மாதாந்த சம்பளம் மிக குறைவானதாகவே உள்ளது எனலாம்.

இதற்கிடையே சர்வதேச புள்ளியியல் நிறுவனம், உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் பற்றிய புள்ளிவிவரங்களை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, உலகம் முழுவதும் உள்ள சுமார் 23 நாடுகளில் சராசரி மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உலகளவில் அதிக மாதாந்திர சராசரி சம்பளம் வழங்கும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதே நேரம் துருக்கி, பிரேசில், அர்ஜென்டினா, இந்தோனேசியா, கொலம்பியா, பங்களாதேஷ், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவை விட குறைவான சராசரி மாத ஊதியம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன.

சமீபத்திய நிலவரப்படி தொழிலாளர்களுக்கு மாதாந்திர சராசரி சம்பளம் அதிகம் உள்ள பட்டியலில் இந்தியா 65-வது இடத்தில் உள்ளது.

அதிக மாதாந்திர சராசரி சம்பளம் கிடைக்கும் டாப் 10 நாடுகளின் மாதாந்திர சராசரி சம்பள விவரங்களை இப்பதிவின் மூலமாக பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்து
இந்த பட்டியலில் முதலில் இருக்கும் நாடான சுவிட்சர்லாந்தில் அந்நாட்டு குடிமக்கள், அதிகபட்ச மாதாந்திர சராசரி சம்பளமாக இந்திய மதிப்பில் ரூ.5,03,335 ($6,096) வரை சம்பாதிக்கின்றனர்.

லக்சம்பர்க்
இந்நாட்டில் கிடைக்கும் அதிகபட்ச மாதாந்திர சராசரி சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.4,14,121 ஆகும்.

சிங்கப்பூர்
சிங்கப்பூரில் வசிக்கும் தனிநபர்கள் சராசரியாக மாதம் ரூ.4,11,924 ($4,989) வரை சம்பாதிக்கிறார்கள்.

அமெரிக்கா
ஒரு அமெரிக்கரின் அதிகபட்ச மாதாந்திர சராசரி சம்பளம் ரூ.3,50,534 ($4,245) ஆகும்.

ஐஸ்லாந்து
இந்த நாட்டில் வசிக்கும் ஒரு தனிநபர் வாங்க கூடிய மாதாந்திர சராசரி சம்பளம் ரூ.3,30,823 ($4,007) ஆகும்.

கத்தார்
கத்தார் நாட்டில் தனிநபர்களின் சராசரி மாத சம்பளம் ரூ.3,28,759 ($3,982) ஆகும்.

டென்மார்க்
மாத சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள் | 10 Countries With Highest Average Monthly Salaries

டென்மார்க்கில் வசிக்கும் மக்களின் மாதாந்திர சராசரி சம்பளம் ரூ.2,92,124 ($3,538) ஆகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களின் சராசரி மாத சம்பளம் ரூ.2,88,821 ($3,498) ஆக உள்ளது.

நெதர்லாந்து
இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து நாட்டு குடிமக்களின் சராசரி மாத சம்பளம் ரூ.2,88,427 ($3,494) ஆகும்.

அவுஸ்திரேலியா
இந்த பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா, அங்கு வேலை பார்ப்போருக்கு மாதத்திற்கு சராசரியாக ரூ.2,79,925 ($3,391) வரை சம்பளம் அளிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *