உணவை பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு பட்டினி கிடக்கும் தாய்மார்கள்!

ஒரு காலத்தில் உலக நாடுகள் பலவற்றைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பிரித்தானியாவில், இன்று உணவுக்கு கஷ்டப்படுவோர் இருப்பதாக வெளியாகிவரும் செய்திகள் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவருகின்றன.

சமீபத்திய ஆய்வொன்று, பிரித்தானியாவில், இருக்கும் உணவை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு பல தாய்மார்கள் பட்டினி கிடப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளது.

கவலையை ஏற்படுத்தும் நேரமாக மாறிப்போன கோடை விடுமுறை

பள்ளி விடுமுறை என்றாலே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விடயம் அல்லவா? ஆனால், பிரித்தானியாவில் கோடை விடுமுறை பலருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

பிரித்தானியாவிலா இப்படி நடக்கிறது? பிள்ளைகளுக்கு உணவளித்துவிட்டு பட்டினி கிடக்கும் தாய்மார்கள்... | Mums Miss Meals For Feeding Kids

 

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பதால், அவர்களுக்கு உணவளிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, 43 சதவிகித தாய்மார்கள் இந்த விடுமுறையில் பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக தாங்கள் உணவைத் தவிர்த்ததாக தெரிவிக்கிறது.

அதாவது, தாங்கள் பட்டினி கிடந்து, பிள்ளைகளுக்கு உணவைக் கொடுக்கிறார்கள் என்கிறது. இன்னொரு பக்கமோ, தங்களுக்காக சோப்பு, ஷாம்பூ, டூத் பேஸ்ட் ஆகியவற்றைக்கூட வாங்காமல், அந்த பணத்தில் தங்கள் பிள்ளைகளுக்கான தேவைகளை சந்திக்கிறார்களாம் 23 சதவிகித தாய்மார்கள்.

26 சதவிகித தய்மார்கள், உள்ளூர் உணவு வங்கிய சார்ந்திருந்ததாக அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *